பசறையில் ஆணொருவரின் சடலமொன்றினை இன்று சனிக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பசறை நகரிலிருந்து மடுல்சீமைக்கு செல்லும் வழியில் ‘கள்’ போதைப் பானம் விற்பனை செய்யும் இடத்திற்கு செல்லும் வழியிலேயே, மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த எம்புலன்ஸ் வண்டி ஊழியர்கள் விழுந்து கிடந்த நபரை பரிசோதனை செய்த போது, அந்நபர் இறந்துள்ளமை ஊர்ஜிதமாகியது.

