சீன தூதுவர் பருத்தித்துறை/யாழ் வருகை

329 0

யாழ்ப்பாணம் பொது நூலகத்தை e-library ஆக மாற்ற உதவ சீனா சாதகமான பதில்- முதல்வர்

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இன்று யாழ்ப்பாணம் வருகை தந்தனர். இதன்போது அவர்கள் பருத்தித்துறை முனை, யாழ்ப்பாணம் பொது நூலகம், கலாசார மண்டபம் , வடக்கு மாகாண ஆளுநரையும் சந்தித்துடன் அளுநர் அலுவலக வழகாத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த கட்டங்களையும் பார்வையிட்டனர்

பருத்தித்துறை முனையினை சீன தூதுவர் பார்வையிட்ட போது Drone கமரா மூலம் வீடியோ பதிவுசெய்தனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு இன்று மாலை வருகை தந்த சீனத் தூதுவர் குழுவினரை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் யாழ் மாநகர அதிகரிகளினால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்ப்பு வழங்கப்பட்டது. நூலகத்தினை பார்வையிட்டதுடன் இந்தியன் கோனரையும் பார்வையிட்டார். பின்னர் பொது நூலகத்துக்கு மடிகணனி, நூல்களையும் தூதுவர் வழங்கி வைத்தார்.

இங்கு மாநகர சபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்-
யாழ்ப்பாணம் பொது நூலகத்தை E நூலகமாக (E-library) மாற்ற வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளோம் இதற்கு சீனாவின் உதவியினை கோரினோம் அவர்களும் அதற்கு சாதகமான எமது கோரிக்கையை ஏற்று செய்யலாம் என கோரினர். நாங்கள் எதிர்காலத்தில் நல்லதொரு உறவைப் பேணவேண்டும் என தூதுவர் கூறியுள்ளார். என்றார்.

சீன தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் – எமது பயணத்தினை நீண்ட நாட்களுக்கு முதலே திட்டமிட்டிருந்தோம் எனினும் கொவிட் காரணமாக அது சாத்தியமாகவில்லை. எமது உறவை மேம்படுத்துவதற்காக இலங்கையின் ஏனைய இடங்களுக்கும் எதிர்காலத்தில் செல்வேன் . இந்தியாவும் – சீனாவும் சிறந்த நண்பர்கள், சிறந்த பங்காளர்கள் , சிறந்த அயலவர்கள் சீனாவும் இந்தியாவும் இலங்கையுடன் சிறந்த நட்பை பேண முடியும் என நினைக்கின்றேன் இரு தரப்பினராலும் தமிழ் சமூகத்தினருக்கு அனுகூலங்கள் கிட்டமுடியும் .

வடக்கில் மின்சக்தி திட்டத்தை சீனா கைவிட்டுள்ளதா என கேட்ட போது-