எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசாங்க உறுப்பினர்கள் குழுவினால் தாக்கப்பட்டதால் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இது தொடர்பான சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த அவசரக் கூட்டம் கூட்டப் பட்டுள்ளது.

