திருகோணமலை வைத்தியசாலை பெண் பணியாளர் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்!

319 0

திருகோணமலை வைத்தியசாலையில் துப்புரவுப் பணியாளராகக் கடமையாற்றும் சதீஸ் ரேகா(36) எனும் இளம் ஊழியர் மன அழுத்தம் அதிகரித்து மூளையிலுள்ள இரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நேற்று மூளைச்சாவடைந்துள்ளார். விடுமுறை கேட்டதற்கு அவரது மேலதிகாரி விடுமுறை வழங்காததும் கடும் வார்த்தைப் பிரயோகமும் தாங்க இயலாமல் மன அழுத்தம் ஏற்பட்டு மூளைச் சாவடைந்ததாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று உயிரிழந்த பெண்ணின் வேண்டுகோளுக்கு அமைய அவரது உறவினர்களால் குறித்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. குறித்த பெண்ணுக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.