இலங்கைக்கு வந்துள்ள லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று இரவு 9.30 மணியளவில் கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்ததாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அதன் மாதிரிகள் நுகர்வோர் அதிகாரசபையின் ஆய்வகங் களில் பரிசோதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

