கல்முனை விசேட பொலிஸ் படையணியைச் சேர்ந்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, 10 கஜமுத்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், 24, 50 மற்றும் 64 வயதுகளுடைய மல்மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

