விபத்தில் இளைஞன் பலி

574 0

வடமராட்சி – மந்திகை பகுதியில், நேற்று  (21) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில், 22 வயது இளைஞன், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாலுசந்தி  மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரரான கண்ணன் காந்தன், என்பவரே  உயிழந்தவர் ஆவர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.