நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலைகளின் செயற்பாடுகள் வழமைக்கு…

303 0

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும்  இன்று (22) அனைத்து   வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து  பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது கடந்த மாதம் 21ம் திகதி  தரம் 5 க்கு உட்ப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் 8 ம் திகதி முதல் தரம் 11-தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (22) முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான  கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும்  கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது அந்தவகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட  63 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும்  5  இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதும் துணுக்காய்  கல்வி வலயத்திற்குட்பட்ட 54 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும்  7 இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதுமாக மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129  பாடசாலைகளினதும்  கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுமே இவ்வாறு இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது

பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியமையானது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது