கொழும்பு, கல்கிஸை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த விடுதியை நடத்திச் சென்ற நபரும் விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஐந்து பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எட்டியாந்தோட்டை, பொரலாந்தை, மொரட்டுவை, இரத்மலானை, பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 48 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

