கிளிநொச்சி கண்டாவளை மக்கள் பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

159 0

பாலத்தினை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் இன்றைய தினம் 17.11.2021 போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் 11.00 மணியளவில் ஆர்ப்பாடம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை  முன்னெடுத்துவரும் குறித்த பதையில் உள்ள பாலத்தினை புதிதாக அபிவிருத்தி செய்து தருவதாக கடந்த மார்ச் மாதமளவில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மழை காலம் வருவதற்கு முன்னர் புதியபாலம் அமைத்து தருவதாக கூறி  பயன்பாட்டிலிருந்த குறித்த பாலத்தினை முற்றாக அகற்றியுள்ளனர். பாலம் அகற்றப்பட்டு பல மாதகாலம் கடந்த நிலையிலும் பாலம் புனரமைப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் மக்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மக்கள் வைத்தியசாலைக்கு செல்வதாயின் இப்பகுதிக்கு நோயாளர் காவுவண்டி செல்ல முடியாத நிலையிலுள்ளதுடன், நீண்ட தூரம் நடந்து சென்று நோயாளர் காவு வண்டியில் செல்லவேண்டி உள்ளதாகவும், மேலும் பாடசாலை மாணவர்கள் சுத்தமான உடை அணிந்து செல்லமுடியாத நிலையும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறுவதன் காரணமாகவும் தமது பகுதியில் வீதிகள் மிகவும் சேதமடைந்துள்ளதுடன், தற்பொழுது  தனியார் ஒருவரினது காணியின் ஊடாகவே பயணிக்கவேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.