ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சுட்டுக்கொலை

387 0

201607110656075420_Pakistan-condemns-killing-of-Burhan-Wani_SECVPFகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்கான் வானியும், அவருடைய கூட்டாளிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு வன்முறை தலைதூக்கி உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.அந்த அறிக்கையில், “அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்வதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.மேலும், “காஷ்மீர் தலைவர் பர்கான் வானியும், பிற அப்பாவி காஷ்மீர் மக்களும் கொல்லப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. கண்டனத்துக்குரியது. இத்தைகய செயல்கள், காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறல்ஆகும். இவை, சுயாட்சி கோரும் காஷ்மீர் மக்களின் உரிமையை தடுத்து விட முடியாது” எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், “காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, சுயாட்சி வழங்குவதுதான் தீர்வாக அமையும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.