ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷிய வீராங்கனை டார்யா கிளைஷினாவுக்கு அனுமதி

670 0

201607110941154309_Allowed-to-participate-in-the-Olympics-for-the-Russian_SECVPFஅடுக்கடுக்கான ஊக்கமருந்து பிரச்சினைகளால் ரஷிய தடகள அணிக்கு, ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில் ரஷிய நீளம் தாண்டுதல் வீராங்கனை டார்யா கிளைஷினாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் நேற்று அனுமதி அளித்தது.

அவரது தகுதி மற்றும் இதர விஷயங்களை தீவிரமாக ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தடகள சம்மேளனம் கூறியுள்ளது. இந்த முடிவு மற்ற ரஷிய தடகள வீரர், வீராங்கனைகளுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது.