மக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்- வானிலை ஆய்வு மையம்

246 0

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என்பதால் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும்  என்பதாலும் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் பல இடங்களில் பலத்த காற்று வீசி வருவதாலும், மழைநீர் தேங்கியுள்ளதாலும் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.