அடுத்த வருடத்திற்கான பாதீடு நாளைய நாடாளுமன்றில் சமர்பிப்பு

226 0

எதிர்வரும் ஆண்டுக்கான பாதீடு நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதீட்டில் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் இவ்வருட பாதீட்டு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்முறை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 5,134 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 1,521 பில்லியன் ரூபாவை, கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிடப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 980.2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்தப் பாதீட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.

கொரோனா நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவும், பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரிவுபடுத்தவும், மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்கவும் வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.