இம்முறை வரவு செலவு திட்ட மொத்த செலவில் கல்வித் துறைக்கு 7.51 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கல்வித் துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
“இது மிகவும் கடினமானது என்றாலும், பரிந்துரைக்கப்பட்ட முழுத்தொகையையும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இதன் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக, அதாவது 30 பில்லியன் ரூபாவை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் நாம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒதுக்கவுள்ளோம். வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக மொத்த வரவு செலவு திட்டத்தில் 6 சதவீதத்திற்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது. இம்முறை வரவு செலவு திட்ட மொத்த செலவில் 7.51 சதவீதம் கல்விக்கு நாம் ஒதுக்கவுள்ளோம்.

