துப்பாக்கிகளுடன் இருவர் கைது

261 0

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கட்டான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இரு சுற்றி வளைப்புக்களில் துப்பாக்கிகளுடன் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, போர்-12 ரக துப்பாக்கியொன்று, துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 51 மற்றும் 55 வயதுகளையுடைய தெமங்சந்தி மற்றும் கொடுகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.