பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இரு உறுப்பினர்களுக்கு பிணை

243 0

கைது செய்யப்பட்ட மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கே.பி ஜயதிஸ்ஸ மற்றும் மேலும் இரு உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற அதிபர் – ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கிருந்தவர்களை மிரட்டி சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் இன்று (10) முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் கடந்த 3 ஆம் திகதி மாவனெல்ல, மெமேரிகம மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.