கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவி குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

212 0

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மாவட்ட நீதவான் அருண அலுத்கேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ராஜா கொல்லுரே கடந்த 24 ஆம் திகதி உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மத்திய குழு அறிவித்திருந்தது.

வடமேல் மாகாண ஆளுநராக செயற்பட்டு வரும் இவர், 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள், அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் இடைநிறுத்தப்படும் என கடந்த தினம் அறிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் அக்கட்சியினால் எடுக்கப்பட்டிருந்தது.