செயலணியில் தமிழ் உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் -செந்தில் தொண்டமான்

423 0

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில், அலரிமாளிகையில் நேற்று (29) நடைபெற்ற ஆளுங்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர், அந்த செயலணியில் தமிழ் உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்வதாக உறுதியளித்துள்ளார் என செந்தில் தொண்டமானின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.