அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களை விரைவில் கொழும்புக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
கண்டியில் இன்று(29) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
நாட்டில் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல தற்போதைய பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

