பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டு இந்து துறவி உட்பட இந்து மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பினால் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையின் செயலாளர் சிவஸ்ரீ க. ஜேயச்சந்திரன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் பேரவை இன்று (27) போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்டு இந்துக்களை அழிப்பதற்கான ஒரு செயற்பாடாகும்.

