சந்தையில் தொடர்ந்து நிலவும் சீனி தட்டுப்பாடு

150 0

சந்தையில் ஏற்பட்டுள்ள சீனி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்குத் தேவையான டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று (28) அல்லது நாளைய தினத்திற்குள் (29) நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாம் நம்புவதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநருடன் இன்று அல்லது நாளைய தினத்திற்குள் கலந்துரையாடி இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்ததாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 122 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 125 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கான நிர்ணய விலையினை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சில வர்த்தகர்கள் அதனைக் கடைப்பிடிக்காததுள்ளதாகக் குறித்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.