பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் 2021.

606 0

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர்
உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட
சுற்றுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றிருந்தன.
கோவிட் 19 பிற்பாடு பல்வேறு சுகாதாரச் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்தும்
கடைப்பிடித்தும் போட்டிகள் நடைபெற்றிருந்த போதும் இறுதிச் சுற்று மாவீரர்
கிண்ணத்துக்கான போட்டி 24.10.2021 மாவீரர்கள் லெப். கேணல்நாதன், கப்டன் கஜன்,
கேணல் பரிதி ஆகியோரின் நினைவுசுமந்த உதைபந்தாட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்றது.
காலை 11.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி பிரெஞ்சுக்கொடி, தமிழீழ தேசிக்கொடிகள்
ஏற்றி வைக்கப்பட்டு ஈகைசுடர் மாவீரர் குடும்பத்தினரால் ஏற்றி மலர்வணக்கம்
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித் திருந்தன.
லெப். கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி நினைவாக 24.10.2021 நடாத்தப்பட்ட
உதைபந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களும், வீரர்களும்.
1 ஆம் இடம் – ரோமியோ நவம்பர்
2 ஆம் இடம் – அரியாலை ஐக்கிய வி. கழகம்.
3 ஆம் இடம் -வல்வை புழுஸ் வி.கழகம்.
• சிறந்த விளையாட்டு வீரர் – ரோமியோ நவம்பர் இலக்கம் 10
• சிறந்த விளையாட்டு வீரர் – அரியாலை இலக்கம் 8
35 வயதுக்கு மேற் பிரிவு
1 ஆம் இடம் – வட்டுக்கோட்டை வி.கழகம்.
2 ஆம் இடம் – சில்வர் ஸ்டார் வி. கழகம்.
சிறந்த விளையாட்டு வீரர்கள்
• தேவ நேசன் – வட்டுக்கோட்டை வி. கழகம்.
• அதி ரூபன் – சில்வர் ஸ்டார் வி.கழகம்


தொடர்ந்து மாவீரர் சுற்றுக்கிண்ணத்திற்கான போட்டிகள் பி.பகல் 16.00 மணிக்கு ஆரம்பமாகியது.

தன்னோடு எதிர்த்து மோதிய எப்சீ 93 வி.கழகத்திற்கு 6 – 1 என்கின்ற
அடிப்படையில் சென். பற்றிக்ஸ் கோல்களைப்போட்டு 3 ஆவது தடவையும்
வெற்றியீட்டி மாவீரர் நினைவு சுமந்த சுற்றுக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
பலத்த போட்டியாகவும், பலமான அணிகளாகவும் களத்தில் தமது
விளையாட்டுத்திறனை வீரர்கள் காட்டியிருந்தனர். மைதானத்தில் ஆதரவாளர்களின்
ஆதரவும் பலமாக வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தது.
• மாவீரர் நினைவு சுமந்த வெற்றிக்கிண்ணத்தையும், சுற்றுக்கிண்ணத்தையும்
பெற்ற வீரர்களும் கழங்களும்
• 1 ஆம் இடம் -சென் பற்றிக்ஸ் வி. கழகம்.
• 2 ஆம் இடம் -எப்சீ 93 வி. கழகம்.
• 3 ஆம் இடம் -வட்டுக்கோட்டை வி. கழகம்.
• சிறந்த விளையாட்டு வீரர்களாக
• திரு. தாமாஸ் – சென் பற்றிக்ஸ் வி.கழகம்.
• திரு. கொட்வின் – சென் பற்றிக்ஸ் வி.கழகம்.
• திரு. பம்ஸ் -எப்ச P 93 வி. கழகம்.


போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு ஈழத்தழிழர் உதைபந்தாட்டச்
சம்மேளனத்தின் தலைவர் திரு. கிருபா அவர்களும், துணைத் தலைவர் திரு. சுரேஸ்
அவர்கள், செயலாளர். ஜெயந்தன் மற்றும் போட்டிக்குழு உறுப்பினர்கள்
வெற்றிக்கிண்ணங்களையும், பதக்கங்களையும் வழங்கி மதிப்பளித்தனர்.
நிகழ்வில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பல்வேறு இடர்கள்,
அழுத்தங்கள் வந்தபோதும் அதற்கு சிறிதும் இடம் கொடுக்காது உண்மை, நேர்மை,
நடுநிலமை என்பதிலிருந்து தவறாது பிரான்சு மண்ணிலே சிறந்ததொரு நடுவராக
இருந்து வரும் மதிப்புக்குரிய மூத்த நடுவர் திரு.ஆனந்தராசா அவர்கள் வீரர்கள்,
உறுப்பினர்கள், பார்வையாளர்களின் மிகுந்த கரவொலிக்கு மத்தியில் ஈழத்தமிழர்
உதைபந்தாட்டச்சம்மேளனத்தின் தலைவர் திரு. கிருபா அவர்களினால் பொன்னாடை
போரத்தி மதிப்பளிக்கப்பட்டார். இவர் காலத்தில் சிறுவர்களாக விளையாடிய வீரர்கள்
பலர் இவரைப்போன்று இன்று நடுவர்களாக மைதானத்தில் கடமையாற்றுவது இவர்கள்
போன்றவர்களின் அர்ப்பணிப்புமிக்க நேர்த்தியான செயற்பாடாகவே அனைவராலும்
பார்க்கப்படுகின்றது.

மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்ட வீரர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்
குழு மற்றும் விளையாட்டுத்துறை செயற்பாட்டாளர்களால் பதக்கங்களும்,
வெற்றிக்கிண்ணமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வில ; தேசியக்கொடிகள்
இறக்கி வைக்கப்பட்டு தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் உச்சிரித்து
நிகழ்வு நிறைவு பெற்றன.
(நன்றி பரப்புரை – ஊடகப்பிரிவு)