ஷெர்மிளா ராஜபக்ஷவுக்கு புதிய பதவி

289 0
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ஷெர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக கடமையாற்றியிருந்த அவர், எதிர்வரும் 28 ஆம் திகதி பதவியேற்க உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து இஷினி விக்கிரமசிங்க அண்மையில் இராஜினாமா செய்ததை அடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.