களனி, வனவாசல, பொசன்வத்தை வீதியில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பேலியகொட பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், வேறோர் இடத்தில் கொடூரமாக அடித்துக் கொலை செய்து மேற்குறிப்பிட்ட பகுதிக்கு சடலத்தை கொண்டுவந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
பேலியகொட, தலங்கனை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், தகராறு காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

