எரிபொருள் கொள்வனவிற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அமைச்சரவை அனுமதி!

384 0
எரிபொருள்  கொள்வனவிற்காக   ஓமானிடம்   இருந்து   3.6  பில்லியன்  அமெரிக்க  டொலர்  கடனுதவியை  பெற்றுக்  கொள்ளவதற்கு   அமைச்சரவை  அனுமதி   வழங்கியுள்ளதாக  எரிசக்தி  அமைச்சரான   உதய  கம்மன்பில   தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிடம் இருந்து  500 மில்லியன் அமெரிக்க  டொலர்   கடனைப்  பெறவுள்ளதாகவும்,   இதற்கு  திறைசேரியின்  அனுமதி   பெறப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர்  கம்மன்பில  தெரிவித்தார்.
இந்த  மாதம்  பாவனைக்கு  தேவையான  எரிபொருளை  கொள்வனவு  செய்வதற்கு  தேவையான  அமெரிக்க டொலர்   தொகையை    மத்திய  வங்கியின்  ஆளுநர்   வழங்குவதாக  உறுதியளித்துள்ளதாகவும்  அவர்  தெரிவித்தார்.