வெள்ளைப்பூண்டு மோசடி விவகாரம்; வர்த்தகரின் மகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

235 0
லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் வர்த்தகரின் மகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சதொச நிறுவனத்திடமிருந்து வெள்ளைபூண்டு கொள்கலன்களை மோ சடியான முறையில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வர்த்தகரின் மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுமார் 11,719,520 ரூபா மோசடி செய்தமை, போலி ஆவணங் களைத் தயாரித்தமை மற்றும் சட்டவிரோதமாகக் கொள்வனவு செய் யப்பட்ட பொருட்களை வைத்திருக்க ஆதரவளித்தமை ஆகிய குற்றச் சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் படவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.