தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கையான தீவுகளையும், ராணுவ நிலைகளையும் சீனா அமைத்தது உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் தென் சீனக்கடலில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.அது மட்டுமின்றி சீனாவுக்கு எதிராக திஹேக் நகரில் ஐ.நா. சட்ட திட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில், தீர்ப்பாயம் நாளை மறுதினம் (12-ந்தேதி) தனது தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹைனான், பாராசெல் தீவுகளில் சீன கடற்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதை சீன ராணுவம் உறுதி செய்துள்ளது. இது தென் சீனக்கடல் பிரச்சினையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவுகளோடு- டுசில்டோர்வ் நகரில் எதிர்வரும் 23.07.2025 அன்று ஒன்றிணைவோம்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024