புர்கான் வானியின் இறுதிச்சடங்கில் 2 இலட்சம் மக்கள்!

369 0

inஇந்தியாவின் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதிலும் இருந்து 2 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தளவுக்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்தவர் புர்கான் முஷாபர் வாணி. இவர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார் என கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஊடகங்களில் செய்தி வெளியானது.இதனையடுத்து இவரது ஆதரவாளர்கள் பலரும் ட்ராவல் பகுதியை நோக்கிப் படையெடுத்தனர். இவரது தகனக் கிரியையில் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.

in 2

இறுதிச்சடங்கு நடைபெற்ற போது பெண்கள் பலரும் மார்பில் தட்டி கதறி அழுதுள்ளதையும், புர்கான் எங்களின் கதாநாயகன் என்றும் கோஷமிட்டதையும் காணக்கூடியதாக இருந்ததாக காஷ்மீர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதேவேளை, புர்கான் வானியின் இறப்பையொட்டி ஆங்காங்கே தொழுகைகளும் இடம்பெற்றுள்ளன.தீவிரவாதி என முத்திரை குத்திய ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு பல எதிர்ப்புக்களையும் மீறி 2இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டமை இந்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.