தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்!

255 0

கொவிட் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை முன்பதிவாளர்களுக்காக மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை தடுக்கும் வகையில் அதிகளவிலானோர் ஒன்றுகூடுவதனை தவிர்த்து, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கு மாத்திரம் பத்தரமுல்லை தலைமை காரியாலயம் மற்றும் தென் மாகாண பிராந்திய காரியாலயத்தில் சேவை வழங்கப்பட்டது.

இதற்கமைய, அடையாள அட்டை பெற உள்ளவர்கள் கிராம சேவகரினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தல் சான்றிதழை, பிரதேச செயலகத்திலுள்ள அடையாள அட்டை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனூடாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியான நேரமொன்றை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகை தந்து உரிய நபர் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

ஒதுக்கிய தினத்தில் சமுகமளிக்க முடியாமல் போனவர்கள், தமது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மீளவும் வேறொரு தினத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.