நிந்தவூர் பிரதேச செயலகத்தை இலத்திரணியல் அலுவலகமாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்களின் பங்கு பற்றுதலுடன் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலகத்தை அம்பாறை மாவட்டத்தில் ஒரு மாதிரி இலத்திரணியல் பிரதேச செயலகமாக மாற்றி பொது மக்களுக்கு உடனுக்குடன் அவர்களுக்கான அறிக்கைகள் வழங்கப்படுவதுடன் இரத சேவைகளையும் விரைவாக வழங்குவதால் பொது மக்கள் பெரும் நன்மை அடைவார்களென, பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்களான கே.எம். றிப்தி, ஆர்.கே.ஏ. றிபாய் காரியப்பர், பீ. பிரபுராஜ், திருமதி எம்.எஸ். சபீனா, கலாநிதி ஐ.எம். காலித், எம்.ஜே.ஏ. சப்னி மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார், சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்பகுழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

