நியூசிலாந்து செல்ல முயன்ற 64 பேருக்கு விளக்கமறியல்

33 0
கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்ட 67 பேரில் 64 பேரை நாளை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் பயாஸ் ரஸாக், இன்று (13) உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்களுக்கு சமைத்துக் கொடுக்க பிள்ளையுடன் தங்கியிருந்த பெண் உட்பட மூவரை பிணையில் செல்லவும் நீதவான் அனுமதி வழங்கினார்.

திருகோணமலை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனையோர் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அரச புலனாய்வு பிரிவின் திருகோணமலை அலுவலகம் சம்பவ இடத்தில் சோதனை நடத்திய பின்னரே, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் நீண்ட கால கடல் பயணம் மற்றும்  குளிர் காலங்களுக்கு தேவையான ஆடைகள் மற்றும் மேலங்கிகளைப் பொதி செய்திருந்தனர் என்றும்  பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஆட்கடத்தற்கார்கால், சந்தேகநபர்கள் ஒவ்வொருவரிடமும் 25 இலட்சம் ரூபாய் முதல் 40 இலட்சம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதகவும் பொலிஸார் தெரிவித்தனர்.