பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் பொருட்களின் விலை குறித்து அரசாங்கம் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரஆராச்சி தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயரும் பிரச்சினையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பொருட்களின் விலைகள் இப்படி உயர்ந்தால், அவை எங்கே முடிவடையும் என்று யோசிக்க முடியாது. பொருட்களை வாங்க முடியாதவர்களுக்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார்.
குறைந்த வருமானம் பெறுவோர்,குறிப்பாக சமுர்த்தி பெறுபவர்கள் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் கடுமையான சிக்கலை எதிர்கொள்வர் என்றும் தான் அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு பொருட்களை அதிக விலையில் வாங்குவது கடினம் என்றும் அவர் கூறினார்.

