கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன
இதுதவிர வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2-ந் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3-ந் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.
கடந்த காலங்களை போல கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
ஆனாலும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும்.

