ஹபரண தொடக்கம் குருநாகல் வரையிலான புகையிரத வீதியை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புகையிரத பாதை அமைக்கப்பட்ட பின், பயணிகளுக்கு அதிகமான வசதி வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளதுடன், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துடனான தொடர்பும் அதிகரிக்கும்.
இப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தமது மரக்கறி உற்பத்தி பொருட்களை இலகுவாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

