அமெரிக்காவில் மேலும் ஒரு காந்தி சிலை திறப்பு

228 0

இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதன் வாயிலாக பொருளாதார நெருக்கடியில் இருந்து கிளார்க்ஸ்டேல் நகரம் மீண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர் பீப்பிள் ஷோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு போன்ற சிக்கல்களில், இந்த நகரம் சிக்கி இருந்தது. இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதன் வாயிலாக பொருளாதார நெருக்கடியில் இருந்து கிளார்க்ஸ்டேல் நகரம் மீண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய கலாசார கவுன்சில் சார்பில் மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது. சிற்பி ராம் சுதார் என்பவர் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழா கிளார்க்ஸ்டேல் நகரில் நடந்தது. கிளார்க்ஸ்டேல் நகர மேயர் சக் எஸ்.பி சிலையை திறந்து வைத்தார்.