மக்களின் வயிற்றில் அடிக்கின்றது அரசு – ஐக்கிய மக்கள் சக்தி

190 0

69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பாரியளவில் அதிகரித்து மக்களின் வயிற்றில் அடிக்கின்றது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அக்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசு மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எனவே, மக்களுக்கு நிவாரணங்ளை வழங்குவது தொடர்பில் அரசு முடிவொன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.