12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை!

115 0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன்,வயது 29 என்பவரே மேற்படி விடுதலைசெய்யப்பட்டவராவார் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.