பண்டோரா பேப்பர்ஸ்’ மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்த விசாரணைகளுக்காக திருக்குமார் நடேசன் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.
வெறுமனே வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தால் அதனால் எந்தவொரு பயனுமில்லை. மாறாக அவரது சொத்துக்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு அவரிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரவேண்டும்.
இல்லாவிட்டால் இவ்விசாரணைகளை வெறுமனே ஊடகங்களின் முன்னால் நடத்துகின்ற நாடகமாக மாத்திரமே கருதமுடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

