தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

