உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும் – முத்தரசன்

342 0

201607101531295518_civic-election-makkal-nala-kootani-continue-mutharasan_SECVPFஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகள் சூழ்ச்சி மற்றும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதன் விளைவாகதான் மக்கள் நல கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது. அதனால் தேர்தல் முறையிலும் மாற்றங்களை செய்திட வேண்டும். தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடாவை தடுக்கமுடியவில்லை. தற்போது பணப்பட்டுவாடாவை தடுக்க தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதே இதற்கு உதாரணம் ஆகும்.

இந்நிலையில் வர இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும். தே.மு.தி.க, த.மா.கா. கட்சிகள் எங்களுடைய கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்பது எங்களுடைய முழுமையான விருப்பம்.

கண்டெய்னர் லாரியில் பணம் பிடிபட்ட விவகாரம் மத்திய அரசின் உடந்தையில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மத்திய அரசுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு தேவைபடுகிறது. அதேப்போல அ.தி.மு.க.விற்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுவது அனைவரும் அறிந்ததுதான்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது. தலைநகரம் கொலை நகரமாக மாறிவிட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.