மீண்டும் வாகன வருமான அனுமதிகள்

227 0
கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கப்பட்டு வந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் நாளை (01) முதல் மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் வ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகான வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை, சேவை பெறுனரின் நலன் கருதி, வெள்ளிக்கிழமை (01) முதல் வழமை போல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.