வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை!

236 0

வவுனியா நெடுங்கேணி பகுதியில்   தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில் , இன்று (புதன்கிழமை) வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர், நெடுங்கேணி பொலிஸாருடன் இணைந்து நெடுங்கேணி நகரில் மக்களின் தடுப்பூசி செலுத்திய அட்டைகளை பரிசோதனை செய்துள்ளார்கள்.

குறித்த தரப்பினரின் பரிசோதனை நடவடிக்கையில்  கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கோவிட் 19 நோய்க்கான ஆபத்தை கூடுதலாக கொண்டிருப்பவர்கள்  என அடையாளப்படுத்தி  அவர்களுக்கும், நெடுங்கேணி நகர வர்த்தக நிலைய ஊழியர்களிற்கும் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.