சட்டவிரோதமாக ட்ரோன் கமராவொன்றை வானில் பறக்கச் செய்த இரண்டு பேர் நேற்று (26) மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ட்ரோன் கமரா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மிரிஹான காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நுகேகொட மணல் பூங்காவில் குறித்த சந்தேகநபர்களினால் ட்ரோன் கமரா பறக்க விடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (27) கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

