மட்டு வாகரையில் சட்டவிரோத மதுபானங்களுடன் வியாபாரியான பெண் ஒருவர் கைது!

241 0

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர் .

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வாகரை காவல்துறை பிரிவிலுள்ள வம்மிவெட்டுவான் பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டை சம்பவதினமான நேற்று இரவு காவல்துறையினர் முற்றுகையிட்டனர் இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து ரின்பியர், மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.