மூன்றாவது டோஸுக்கு இன்னும் பரிந்துரை இல்லை:- வைத்தியர். ஹேமந்த ஹேரத்

55 0

கொவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸை நிர்வகிப்பது தொடர்பில் குறிப்பிட்ட பரிந்துரை எதுவும் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு அத்தகைய பரிந்துரை கிடைத்தவுடன் அதை செயற்படுத்தும் திறன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.அத்தகைய பரிந்துரையைப் பெற்றவுடன் இத்திட்டத்தை செயற்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது. எங்களிடம் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மாத்திரமே கட்டுப்படுத்தும் காரணி. நாம் எப்படியாவது பொருத்தமான தடுப்பூசியை கொள்வனவுச் செய்தால், அதை நிர்வகிப்பதில் எங்களுக்கு பிரச்சனை இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.