குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாநகர் பகுதி முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாநகரில் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு, கூட்டுக் கொள்ளை ஆகிய குற்றங்களை தடுக்கவும், பழைய குற்றவாளிகளை பிடிக்கவும் திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கொள்ளையர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலரும் பழைய குற்றவாளிகள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாநகர் பகுதி முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் மீது தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கமிஷனர் தெரிவித்தார்.

