இலங்கையின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்படுகிறது – சுகாதார அமைச்சர்

269 0

உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை அமைப்பில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த ஏராளமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள வார்ட்கள் மற்றும் கிளினிக்குகள் அபிவிருத்திச் செய்யப்படும். அத்துடன் மகப்பேறு வார்ட்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய வார்ட்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.