தடுப்பூசித் திட்டத்தின் போது சிறுவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க சுகாதார பிரிவுகள் தீர்மானம்!

281 0

சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கப்படும் போது சிறுவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க சுகாதார பிரிவுகள் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிற நாடுகளில் உள்ள நெறிமுறைகளை பின்பற்றப்படும் போது சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசியை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினரான வைத்தியர். பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

15 முதல் 19 வயதுக்குட்பட்ட இணை நோய்களைக் கொண்ட சிறுவர்கள் முதலில் தடுப்பூசியைப் பெறுவார்கள். அத்துடன் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் நிபுணர்களின் மேற்பார்வையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும், அத்துடன் பெற்றோர்கள் இது குறித்து தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.