தமிழ் அரசியல் கைதிகளைபார்வையிட குடும்பத்தவர்களை அனுமதிக்கும்படி அரசாங்கத்தை கோரவுள்ளோம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

222 0

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தல் குறித்து தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர் . அவர்கள் இப்போது என்ன மன நிலையில் உள்ளனரோ என கவலைவெளியிட்டுள்ளதுடன் அவர்களை பார்வையிட அனுமதியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் வேண்;டுகோள் விடுத்துள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசிடம் உத்தியோகபூர்வமான கோரிக்கையியினைமுன் வைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று (15.09.2021) காலை 11 மணிக்கு இடம்பெற்ற இணையவழியிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற வேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் குறிப்பாக இருவரை அழைத்து மு ழந்தாளில் அமர்த்தி தனது சுய பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியினால் நெற்றியில் குறி வைத்து அச்சுறுத்தி உள்ளார் . இந்த நிமிடமே இந்த இரு உயிர்களையும் பறிக்க தயார் என்ற நிலையில் அச்சுறுத்தியுள்ளார். இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி . வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் குறித்த இராஜாங்க அமைச்சரை அனைத்து பதவிகளில் இருந்தும் அரசாங்கம் நீக்க வேண்டும் என எமது அமைப்பு உத்தியோகபூர்வமாக கோருகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்களை அவர்களின் நலன்களை பேணிப்பாது காக்க வேண்டியவர் தான் அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது எந்த பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்பதனை தான் பார்க்க வேண்டும்.
மனித உரிமைப் பேரவை தமிழ் மக்களை காப்பாற்றப் போகின்றோம் என்ற ஓர் முக்கிய கட்டமைப்புக்காக காட்டப்படும் கட்டமைப்பு இலங்கை தொடர்பாக வாய்மூலமான அறிக்கையை வெளியிட்டிருக்கும் சூழலில் தான் இந்த கைதிகள் மீதான கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஓர் கொடுமையான சட்டம் .அதனை நீக்க வேண்டும் ; மீளாய்வு செய்யப்பட வேண்டும் என மனித உரிமைப் பேரவை கூறிய நிலையில் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கைதிகள் மீதான அச்சுறுத்தல் சாதாரண விடயம் அல்ல. இது எதைக் காட்டுகின்றது என்றால் எந்தளவுக்கு இலங்கை அரசு மனித உரிமை பேரவையை மதிக்கின்றது என்பதை காட்டுகின்றது. ஆணித்தரமாக உலகிற்கு காட்டும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

. அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் தம் உறவுகளின் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் கொள்வதாகவும் அவர்களை நேரில் சென்று பார்வையிடவும் விரும்புகின்றனர். இந்த கோரிக்கையை அனுமதிக்கும்படி அரசிடம் உத்தியோக பூர்வமான கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம் என்றார்.